ADDED : மே 02, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்:
குமாரபாளையத்தில் பா.ஜ., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மாவட்ட பொது செயலர் சரவணராஜன், நகர தலைவர் வாணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். தொடர்ந்து, மக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளரி, கரும்புச்சாறு, நுங்கு, நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டன. மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர், நகர பொதுச்செயலர் சுரேஷ்குமார், உள்பட நகர, மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.