ADDED : மார் 02, 2026 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை காந்திசிலை அருகே, பா.ஜ., சார்பில் தெருமுனை கூட்டம் நடந்தது. கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''மத்திய அரசு சார்பில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, விவசாயிகளுக்கு, 6,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் மூலம் விவசாயிகள் வளர்ச்சியடைந்து வருகின்றனர்.
மேலும், அனைத்து மாநிலத்திலும் பா.ஜ., கட்சி வலுப்பெற்று சிறப்பாக உள்ளது,'' என்றார். மாவட்ட பொதுச்செயலாளர் சாமிதுரை, துணை தலைவர் சக்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் பெருமாள், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

