தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குண்டும், குழியுமான சாலை பா.ஜ., இளைஞரணி சீரமைப்பு

குண்டும், குழியுமான சாலை பா.ஜ., இளைஞரணி சீரமைப்பு

குண்டும், குழியுமான சாலை பா.ஜ., இளைஞரணி சீரமைப்பு


ADDED : பிப் 11, 2026 07:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 07:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கிழக்கு தொடக்கப்பள்ளி சாலையில்

ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதை பா.ஜ., இளைஞரணியினர் சீரமைத்தனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட லாலாப்பேட்டை கிழக்கு அரசு தொடக்கப்பள்ளி, கொடிக்கால் தெரு ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ளது. இப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் சிமென்ட் சாலை, பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் மாணவ, மாணவியர் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கரூர் மாவட்ட பா.ஜ., இளைஞரணி தலைவர் பெருமாள் தலைமையில், சிமென்ட் சாலையில் ஏற்பட்ட மேடு, பள்ளங்களை அக்கட்சியினர் சீரமைத்தனர். இதற்கு, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us