/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் கருப்பு கவுனி அரிசி விற்பனை தொடக்க விழா
/
கரூரில் கருப்பு கவுனி அரிசி விற்பனை தொடக்க விழா
ADDED : செப் 06, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் :குளித்தலை வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம், கருப்பு கவுனி அரிசி விற்பனை தொடக்க விழா, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அதில், மருத்துவ குணம் கொண்ட கருப்பு கவுனி அரிசி விற்பனையை, கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.
விழாவில், கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, குளித்தலை சரக துணைப்பதிவாளர் திருமதி, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணைப்பதிவாளர்கள் அமுத ராணி, மணி சபரீஷ் உள்பட கூட்டுறவு சங்க ஊழியர்கள் பங்கேற்றனர்.