வெற்றி திட்டத்தின் சார்பில் வட்டார அளவிலான பயிற்சி
வெற்றி திட்டத்தின் சார்பில் வட்டார அளவிலான பயிற்சி
ADDED : அக் 08, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி:கரூர்
மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், கிராமப்புற
அடிப்படை வசதிகளை
மேம்படுத்துவதற்கான டி.என். வெற்றி சிறப்பு
திட்டத்தின் வட்டார அளவிலான பயிற்சி முகாம் அரவக்குறிச்சியில்
நடந்தது.
ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகநாதன், ஹேமாவதி
ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து பேசுகையில்,' டி.என். வெற்றி திட்டத்தின்
முதன்மை நோக்கமே கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு,
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம், தார் மற்றும் சிமென்ட் சாலை
அமைத்தல், தெருவிளக்கு வசதி ஆகியவற்றை உடனுக்குடன் செய்து நிறைவேற்ற
வேண்டும்,' என்றனர்.
முகாமில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,
உதவி பொறியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள், களப்பணியாளர்கள்
மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
