ADDED : அக் 07, 2026 06:46 AM
குளித்தலை:குளித்தலை
அண்ணா திருமண மண்டபத்தில், தமிழ்நாடு வெற்றி திட்டம் 2026--27
தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் மூலம், அடிப்படை வசதிகளை
மேம்படுத்துவது குறித்து, வட்டார அளவிலான பயிற்சி கூட்டம்
நடந்தது.
மாவட்ட உதவி திட்ட அலுவலரும், குளித்தலை மண்டல
அலுவலருமான ஹேமலதா தலைமை வகித்தார். குளித்தலை ஒன்றிய கமிஷனர்கள்
ராஜேந்திரன், முத்துக்குமார், பொறியாளர் செல்வி ஆகியோர் முன்னிலை
வகித்தனர். திட்ட மேலாளர் விவேகானந்தன், திட்ட செயல்பாடுகள் குறித்து
விளக்கம் அளித்தார்.
பயிற்சி இன்று முதல் வரும் 17ம் தேதி வரை பயிற்சி
நடக்கிறது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உள்ள பஞ்., செயலாளர்கள், சுய
உதவி குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர்
குழுக்களாக இணைந்து ஒவ்வொரு கிராமத்தில் வீடு, தெரு வாரியாக
கணக்கெடுப்பு செய்து. தேவையான மின்விளக்கு, சாலை, முழு சுகாதார
திட்டம், ஆழ்குழாய் அமைத்தல், குடிநீர் தொட்டி அமைத்தல், கழிவுநீர்
வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மக்களிடம் விசாரணை செய்து
அறிக்கையாக பதிவு செய்து, மண்டல அலுவலரிடம் தாக்கல் செய்வது
தொடர்பாக, பயிற்சி அளிக்கப்பட்டது.
