/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது பாய்ந்தது போக்சோ
ADDED : ஆக 28, 2024 08:45 AM
கரூர்: கரூர் அருகே, சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வெள்ளோடு குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் சரவணகுமார், 21; இவர், கரூர் மாவட்டம் புகழூர் பகுதியை சேர்ந்த, 15 வயதுடைய சிறுமியை, கடந்தாண்டு நவ., 13 ல் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது, சிறுமிக்கு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில், ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து, க.பரமத்தி பஞ்., யூனியன் சமூக நல அலுவலர் சித்ரா, 55; கொடுத்த புகாரின்படி, கரூர் ரூரல் மகளிர் போலீசார் சரவணகுமார் மீது, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.