ADDED : செப் 25, 2026 07:22 AM
குளித்தலை:குளித்தலை
அடுத்த முத்துகவுண்டம்பட்டி பகுதியில், அனுமதியின்றி
காற்றாற்று மணல் மற்றும் விவசாய கிணற்று மண் கடத்துவதாக தகவல்
வந்தது.
இதையடுத்து தோகைமலை எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன், நேற்று
முன்தினம் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது,
முத்துகவுண்டம்பட்டி முத்துசாமி வீட்டின் அருகே, பொக்லைன்
உதவியுடன் டிப்பர் லாரியில் கிணற்று மண், மூன்று யூனிட் ஏற்றினர்.
இதையடுத்து பொக்லைன், டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
திருச்சி
மாவட்டம், மணப்பாறை அடுத்த மொண்டிபட்டியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர்
பாரதிராஜா, 29, பாதிரிப்பட்டி பஞ்., ஊத்துப்பட்டியை சேர்ந்த
பொக்லைன் டிரைவர் சத்யா, 25, மற்றும் இடத்தின் உரிமையாளர் முத்துசாமி
ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படட்து. இதில், டிப்பர்
லாரி டிரைவர் பாரதி
ராஜா கைது செய்யப்பட்டார்.
