/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயிலில் வெடிகுண்டு புரளி: ஒருவர் கைது
/
ரயிலில் வெடிகுண்டு புரளி: ஒருவர் கைது
ADDED : ஜூன் 25, 2025 02:31 AM
கரூர், திருச்சி மாவட்டம், தென்னுார் பகுதியை சேர்ந்தவர் கலில் அஹமத், 40; இவர், நேற்று மதியம், கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் உள்ள உறவினரின் இறப்பு காரியத்துக்கு, திருச்சியில் இருந்து கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். அங்கு இறங்கிய அவர், சுற்றியிருந்த பயணி
களிடம், சேலம்-மயிலாடுதுறை ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என, தெரிவித்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த பயணி
கள், கரூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் உடனடியாக வெடிகுண்டு உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்காததால், இது புரளி என தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கலில் அஹமதுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் கரூர் ரயில்வே ஸ்டேஷனில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.