/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்ட நுாலகத்தில் புத்தக கண்காட்சி
/
மாவட்ட நுாலகத்தில் புத்தக கண்காட்சி
ADDED : நவ 15, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்ட நுாலகத்தில்
புத்தக கண்காட்சி
கரூர், நவ. 15-
கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், 57வது தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு புத்தக கண்காட்சி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நுாலக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகள், வாசகர்கள், பொது மக்கள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். அரசு பள்ளிகளில் பயிலும் 300 மாணவ, மாணவிகள் நுாலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். மாவட்ட மைய நுாலக வளர்ச்சிக்காக புரவலர் சேர்க்கை திட்டத்தின் கீழ், 10 நபர்கள் புரவலர்களாக இணைந்துள்ளனர். நிகழ்ச்சியில், வாசகர் வட்டத் தலைவர் சங்கர் உள்பட பலர்
பங்கேற்றனர்.