கோடைக்கால பயிற்சி முகாம்மாணவர்களுக்கு புத்தகம் பரிசு
கோடைக்கால பயிற்சி முகாம்மாணவர்களுக்கு புத்தகம் பரிசு
ADDED : மே 28, 2026 05:36 AM
அ நிறம் | அளவு
கரூர்:இனாம் கரூர் கிளை நுாலகத்தில், கோடை காலத்தையொட்டி, சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
அதில், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு, அறிவியல் ரீதியான பயன்பாடு, கதை சொல்லுதல், ஓவியம் வரைதல், வாசிப்பு பழக்கம், தாயம், ஆடுபுலி ஆட்டம், பரமபத விளையாட்டு குறித்து பயிற்சியுடன் கூடிய விளக்கம் அளிக்கப்பட்டது. 55 மாணவ, மாணவியர் நுாலக உறுப்பினர்களாக சேர்ந்தனர். அவர்களுக்கான கட்டணத்தை வெங்கமேடு கொடை பண்பலை நேயர்கள் வழங்கினர். மேலும் அரசு பணியில் உள்ள ஜெயஸ்ரீ, கோபிநாத், செல்வகுமார் ஆகியோர், 1,000 ரூபாய் செலுத்தி நுாலக புரவலர்களாக இணைந்தனர்.பயிற்சி முகாமில், கிளை நுாலகர் மோகன சுந்தரம் பங்கேற்றார். பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு புத்தகம் பரிசாக வழங்கப்
பட்டது.
