/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திரு.வி.க., மன்றம் சார்பில் நுால் வெளியீட்டு விழா
/
திரு.வி.க., மன்றம் சார்பில் நுால் வெளியீட்டு விழா
ADDED : ஜூலை 01, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், தமிழமுது அறக்கட்டளை மற்றும் திரு.வி.க., மன்றம் சார்பில், புதிய நுால் வெளியீட்டு விழா, கரூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
அதில், முன்னாள் தமிழ் ஆசிரியர் அருணா பொன்னுசாமி எழுதிய, மூவேந்தர் காப்பியம் என்ற நுாலை, மயிலம் பொம்மபுரம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் வெளியிட, துரை தில்லான் பெற்றுக்கொண்டார்.
விழாவில், எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, வரலாற்று பேராசிரியர் ராஜசேகர தங்கமணி, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், கவிஞர் செல்வம், நிர்வாகிகள் ராமலிங்கம், அரியநாயகம், தொழிலதிபர் தங்கராசு உள்பட, பலர் பங்கேற்றனர்.