ADDED : ஏப் 14, 2026 04:11 AM
கரூர் : சட்டசபை தேர்தலையொட்டி, எல்லை பாதுகாப்பு படையினர், நேற்று கரூர் வெங்க
மேட்டில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும், 23ல் நடக்கிறது. அதற்கான பணிகளில் மத்திய, மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், முதல் கட்டமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், உதவி கமாண்டர் மீனா சிங் தலைமையில் கடந்த மார்ச், 9ல், 78 பேர் கரூர் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த, 300 பேர் கரூர் வந்தனர். அவர்கள், நேற்று காலை வெங்கமேட்டில் இருந்து, வாங்கப்பாளையம் வரை பொதுமக்கள் அச்சம் இல்லாமல், ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி கொடி அணிவகுப்பு நடத்தினர்.
அதில், எஸ்.பி., ஹரி கிரண் பிரசாத், கரூர் டவுன் போலீஸ் டி.எஸ்.பி., செல்வராஜ், பயிற்சி டி.எஸ்.பி., லோகநாதன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
