/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போர்வெல் பழுது பார்க்கும் வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளிகள் பலி
/
போர்வெல் பழுது பார்க்கும் வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளிகள் பலி
போர்வெல் பழுது பார்க்கும் வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளிகள் பலி
போர்வெல் பழுது பார்க்கும் வாகனத்தில் மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளிகள் பலி
ADDED : பிப் 21, 2025 07:28 AM
கரூர்: க.பரமத்தி அருகே, போர்வெல் பழுது பார்க்கும் வாகனத்தில், மின்சாரம் பாய்ந்து இரண்டு தொழிலாளர்கள் இறந்தனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி சுற்று வட்டார பகுதி, தமிழகத்திலேயே அதிக வெயில் பதிவாகும் இடமாக இருந்து வருகிறது. கோடை காலம் துவங்குவதற்கு முன்பே, பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்காக பணிகளை, பஞ்., நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, க.பரமத்தி அருகில் கிரசர்மேட்டில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், முன்னுார் பஞ்., சார்பில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லில் பழுது ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சரி செய்ய, போர்வெல் பழுது பார்க்கும் வாகனத்முன்னுாரை சேர்ந்த பாலசுப்பிரமணியன், 44, நிமிந்தப்பட்டியை சேர்ந்த சதீஷ், 30, ஆகியோர் அங்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள், போர்வெல்லில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணியில் நேற்று மதியம், 2:00 மணியளவில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, மேலே செல்லும் மின்கம்பி மீது, போர்வெல் வாகனம் உரசியதில் மின்சாரம் பாய்ந்தது. இதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே, பாலசுப்பிரமணியன், சதீஷ் ஆகியோர் உயிரிழந்தனர். இது குறித்து, க.பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போர்வெல் பழுது பார்க்க சென்ற இடத்தில், மின்சாரம் தாக்கி இருவர் இறந்தது, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.