ADDED : ஏப் 05, 2026 05:13 AM
மோகனுார், மோகனுார் அடுத்த குத்தாங்கல்மேட்டை சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ், 45; லாரி டிரைவர். இவரது மனைவி லட்சுமி, 40. தம்பதியருக்கு, தீபிகா, 16, என்ற மகளும், மவுலீஸ்வரன், 13, மகனும் உள்ளனர்.
இதில், மவுலீஸ்வரன், ஏழாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம், பள்ளி விடுமுறை என்பதால், மாலை, 5:00 மணிக்கு, வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத வகையில், ஊஞ்சல் கட்டிய சேலை கழுத்தை இறுக்கி மயக்க
மடைந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தீபிகா, சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து, சிறுவனை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மவுலீஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
இச்சம்பவம், அப்பகுதயில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
