தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ '51,942 மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கப்படும்'

'51,942 மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கப்படும்'

'51,942 மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கப்படும்'


ADDED : செப் 23, 2026 07:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 07:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:மாவட்டத்தில், 1,078 அரசு பள்ளிகளில் உள்ள, 51,942 மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

கரூர் மாவட்டம், மணவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்ட தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் முத்துக்குமரன் மாணவ, மாணவியருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

அப்போது அவர் கூறிய தாவது: கரூர் மாவட்டத்தில், காலை உணவு திட்டத்தின் மூலம், 1 முதல் 5ம் வகுப்பு வரை, 768 பள்ளிகளில் பயிலும், 30,669 மாணவ, மாணவியர் பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில், காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தின் மூலம், 6 முதல் 8ம் வகுப்பு வரை, 310 அரசு பள்ளிகளில் பயிலும், 21,273 மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதன்படி, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, 1,078 அரசு பள்ளிகளில் பயிலும், 51,942 மாணவ, மாணவியர் பயன் பெறுகின்றனர்.

நகர்ப்புற பகுதிகளில், 4 ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், திங்கட்கிழமை -வெண் பொங்கல், காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை -சேமியா கிச்சடி, காய்கறி சாம்பார், புதன்கிழமை- வெண் பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்

கிழமை - ரவா உப்புமா, காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை- கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் என ஐந்து பள்ளி வேலை நாட்களில், உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் த.வெ.க., - எம்.எல்.ஏ.,

சத்யா, மாநகராட்சி கமிஷனர் பிரித்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி

முகமை திட்ட இயக்குனர் தனசேகரன், முதன்மை கல்வி அலுவலர் ராஜூ உள்பட பலர் பங்கேற்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us