/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொல்லிமலையில் விசேஷங்களுக்கு சாராயம் காய்ச்சினால் நடவடிக்கை
/
கொல்லிமலையில் விசேஷங்களுக்கு சாராயம் காய்ச்சினால் நடவடிக்கை
கொல்லிமலையில் விசேஷங்களுக்கு சாராயம் காய்ச்சினால் நடவடிக்கை
கொல்லிமலையில் விசேஷங்களுக்கு சாராயம் காய்ச்சினால் நடவடிக்கை
ADDED : ஜூலை 25, 2024 01:34 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலையில் வாழவந்திநாடு போலீஸ் மற்றும் மது விலக்கு பிரிவு சார்பில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் ஒழிப்பு, கள்-ளத்துப்பாக்கி பயன்பாடு குறித்த சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் வல்வில் ஓரி அரங்கில் நடந்தது.
ஏ.டி.எஸ்.பி., தனராசு முன்-னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வரவேற்றார். எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் கலந்துகொண்டார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: கொல்லிமலையில் திருமணம், காதுகுத்து உள்ளிட்ட விசேஷங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விருந்தில் கொடுப்பதாக புகார் வருகிறது. இந்த கலாசாரத்தை மலைவாழ் மக்கள் முற்றிலும் மாற்ற வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களுக்கு, தற்போது அரசு கடுமை-யான தண்டனையை சட்டமாக அறிவித்துள்ளது. இதை கண்டிப்-பாக மலைவாழ் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். திருமண விழாக்களுக்கு சாராயம் காய்ச்சியதாக கண்டுபிடிக்கப்பட்டால், மணமகன், மணமகளின் தந்தை உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்படுவர். மேலும், விசேஷ வீடுகளை போலீசார் கண்காணித்து வருகின்-றனர். மது பழக்கத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். கொல்லிமலையில் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் கூட இல்லை என்றால், நம் மாவட்டம் கள்ளச்சாராயம் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

