தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ செங்கல் சூளை உரிமையாளர் அந்தியூரில் ஆவேசம்

செங்கல் சூளை உரிமையாளர் அந்தியூரில் ஆவேசம்

செங்கல் சூளை உரிமையாளர் அந்தியூரில் ஆவேசம்


ADDED : பிப் 08, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 06:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், 75க்கும் மேற்பட்ட செங்கல் சூளை உள்ளது. வெள்ளித்தி-ருப்பூர், சனி சந்தை, ரெட்டிபாளையம், அம்மா-பேட்டை, பூனாச்சி பகுதிகளில் இருந்து, செங்கல் தயாரிப்புக்கு தேவையான செம்மண், டிப்பர் லாரி-களில் கொண்டு வரப்படுகின்றன. இந்த லாரிகள் அந்தியூர் டவுனுக்குள் வரக்கூடாது என வருவாய் துறையினர் தடை விதித்ததால், மைக்கேல்பா-ளையம் வழியாக செல்கின்றனர்.

இதை மீறி டவுனுக்குள் வரும் லாரிகளை, வருவாய் துறையினர் பறிமுதல் செய்து போலீசில் புகார் தருகின்றனர். இந்நிலையில் மைக்கேல்பாளையம் கிராமப்பகுதி வழியாக செல்லும் லாரிகளை மக்கள் தடுத்து நிறுத்துவ-தாலும், அரசியல் கட்சியினர் சிலர் பணம் கேட்டு மிரட்டியதாலும், சூளை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள், டிப்பர் லாரிகளை அந்-தியூர் தாலுகா அலுவலகம் முன், நேற்று காலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லாரிகளை டவுனுக்குள் அனுமதிக்க வேண்டும். மிரட்டி பணம் பறிக்கும் கட்சியினர் மீது நடவ-டிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். தாலுகா அதி-காரிகள், அந்தியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இரு நாட்களில் அந்தியூர் டவுனுக்குள் குறிப்-பிட்ட நேரத்துக்கு லாரிகளை அனுமதிப்பது குறித்து, சப்-கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். பணம் கேட்டு மிரட்டும் அரசியல் கட்சியினர் மீது புகாரளித்தால் நடவடிக்கை எடுக்-கப்படும் என்றும் உறுதியளிக்கவே, போராட்-டத்தை கைவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us