ADDED : மே 15, 2026 05:50 AM

அ நிறம் | அளவு
கரூர் கரூர் மற்றும் சுற்று வட்டார சாலைகளில், புதிய சிமென்ட் கம்பங்கள் உடைந்த நிலையில் உள்ளது.
கரூர் மாவட்டத்தில், சேதம் அடைந்த பழைய சிமென்ட் மின் கம்பங்களை அகற்றி விட்டு, புதிய கம்பங்களை நடுவதற்காக ஆங்காங்கே சாலைகளில், புதிய சிமென்ட் மின் கம்பங்கள் போடப்பட்டுள்ளன. சில பகுதிகளில், பல மாதங்களாக போடப்பட்டுள்ள புதிய சிமென்ட் மின் கம்பங்கள் உடைந்த நிலையில் காணப்படுகிறது. அதை மின் வாரிய அதிகாரிகள், கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
குறிப்பாக, கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே, பல புதிய சிமென்ட் மின் கம்பங்கள் உடைந்த நிலையில் உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, புதிய சிமென்ட் மின் கம்பங்களை, உடனடியாக பொருத்த மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது
அவசியம்.
