/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் அருகே உடைந்த குடிநீர் குழாய்: மக்கள் கடும் அதிருப்தி
/
கரூர் அருகே உடைந்த குடிநீர் குழாய்: மக்கள் கடும் அதிருப்தி
கரூர் அருகே உடைந்த குடிநீர் குழாய்: மக்கள் கடும் அதிருப்தி
கரூர் அருகே உடைந்த குடிநீர் குழாய்: மக்கள் கடும் அதிருப்தி
ADDED : பிப் 10, 2024 07:33 AM
கரூர் : கரூர் அருகே, பல மாதங்களாக குழாய் உடைந்து, சாலையில் குடிநீர் ஆறாக ஓடுகிறது. இதனால், அந்த பகுதியை சேர்ந்த, பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கரூர் மாவட்டம், நெரூரில் பிரசித்தி பெற்ற சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. இதன் நுழைவு வாயில் பகுதியில், பல நாட்களாககளாக குழாய் உடைந்த நிலையில் உள்ளது. அதில் இருந்து வெளி யேறும் குடிநீர், சாலையில் ஆறாக ஓடுகிறது. இதுகுறித்து, அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் புகார் தெரிவித்தும், உடைந்த குழாயை சரி செய்யாமல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நெரூர் பஞ்சாயத்து தென்பாகம் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது.
இதனால், நெரூர் பகுதியை சேர்ந்த பொது மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். உடைந்துள்ள குடிநீர் குழாயை சரி செய்து, தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்