ADDED : மே 25, 2026 02:36 AM
கரூர்:கரூர்-கோவை சாலையில் உடைந்துள்ள இரும்பு தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூரில்
இருந்து கோவை செல்லும் சாலை நடுவே, 2 கிலோ மீட்டர் துாரத்தில் இரும்பு
தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல இடங்களில்
இரும்பு தடுப்பு கம்பிகள் உடைந்தும், வளைந்தும் காணப்படுகிறது.
கோவை சாலையில் நாள்தோறும், நுாற்றுக்கணக்கான லாரிகள், பஸ்கள்
உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதை தவிர, இருசக்கர
வாகனங்களிலும், பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் உடைந்துள்ள தடுப்பு கம்பிகளால்,
கோவை சாலையில் நாள்தோறும் விபத்து ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும்,
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக
உள்ளனர். விபத்துக்கு முன், கரூர்-கோவை சாலையில் உடைந்த நிலையில் உள்ள
இரும்பு தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டியது அவசியம்.
