sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கோவை சாலையில் உடைந்த நிலையில் இரும்பு கம்பிகளால் விபத்து அபாயம்

/

கோவை சாலையில் உடைந்த நிலையில் இரும்பு கம்பிகளால் விபத்து அபாயம்

கோவை சாலையில் உடைந்த நிலையில் இரும்பு கம்பிகளால் விபத்து அபாயம்

கோவை சாலையில் உடைந்த நிலையில் இரும்பு கம்பிகளால் விபத்து அபாயம்


ADDED : டிச 23, 2024 10:01 AM

Google News

ADDED : டிச 23, 2024 10:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் - கோவை சாலை யில் உடைந்துள்ள, இரும்பு தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூரில் இருந்து, கோவை செல்லும் சாலையின் நடுவே, இரண்டு கிலோ மீட்டர் துாரத்தில் இரும்பு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பல இடங்களில் இரும்பு தடுப்பு கம்பிகள் உடைந்தும், வளைந்தும் காணப்படுகிறது. கோவை சாலையில் நாள்தோறும், நுாற்றுக்கணக்கான லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதை தவிர, இருசக்கர வாகனங்களிலும், பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் உடைந்துள்ள தடுப்பு கம்பிகளால், கோவை சாலையில் நாள்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். விபத்து மூலம் பொதுமக்கள் படுகாயம் அடைவது தொடர்கதையாக உள்ளது. எனவே, உடைந்த நிலையில் உள்ள, இரும்பு தடுப்பு கம்பிகளை அகற்ற வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us