ADDED : ஆக 19, 2024 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி டவுன் பஞ்.,க்குட்பட்ட, ஏழாவது வார்டில் காவிரி நீர்த்தேக்க நிலையம் அமைந்துள்ளது. போலீஸ் ஸ்டேஷ-னிலிருந்து, காசி விஸ்வநாதர் கோவில் செல்லும் சாலையில், இந்த நீர்த்தேக்க நிலையம் அமைந்துள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் இந்த சாலையில், 15க்கும் மேற்பட்ட இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தினந்தோறும், 5,000 லிட்டருக்கு மேல் குடிநீர் வீணாகி வருகிறது.
அருகில் வசிப்பவர்களுக்கு, பத்து நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தினமும், 5,000 லிட்டருக்கு மேல் குடிநீர் வீணாகி வருவது பொதுமக்-களை விரக்தியடை செய்துள்ளது. உடைந்த குழாய்களை சீர-மைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.

