/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மினி பஸ் ஸ்டாண்டில் உடைந்த சாக்கடை வாய்க்கால்
/
கரூர் மினி பஸ் ஸ்டாண்டில் உடைந்த சாக்கடை வாய்க்கால்
கரூர் மினி பஸ் ஸ்டாண்டில் உடைந்த சாக்கடை வாய்க்கால்
கரூர் மினி பஸ் ஸ்டாண்டில் உடைந்த சாக்கடை வாய்க்கால்
ADDED : ஜன 13, 2025 03:10 AM
கரூர்: கரூர் மினி பஸ் ஸ்டாண்டில், கழிவுநீர் சாக்கடை வாய்க்கால் உடைந்து, திறந்த நிலையில் உள்ளது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், தொற்று நோய் அபாயம் உள்ளது.
கரூர் நகரின் மையப்பகுதியில் உள்ள, பிரதான பஸ் ஸ்டாண்-டுக்கு அருகில், மினி பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. அங்கி-ருந்து, 50க்கும் மேற்பட்ட மினி பஸ்கள், கரூர் மற்றும் சுற்று வட்-டார பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இதனால், நாள்தோறும் மினி பஸ் ஸ்டாண்டுக்கு, 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மினி பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிவுநீர் சாக்கடை வாய்க்கால் உடைந்து, திறந்த நிலையில் உள்ளது. சில நேரங்-களில் கழிவுநீர் வெளியேறி, மினி பஸ் ஸ்டாண்டில் ஆறாக ஓடு-கிறது. இதனால், மினி பஸ் ஸ்டாண்ட் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியில், தொற்று நோய் அபாயம் உள்ளது. எனவே, கரூர் மினி பஸ் ஸ்டாண்டில் உடைந்துள்ள கழிவுநீர் சாக்-கடை வாய்க்காலை துார்வாரி, சீரமைக்க கரூர் மாநகராட்சி நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.