/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உடைந்த நிலையில் வழிகாட்டி போர்டுகள் கரூரில் வாகன ஓட்டிகள் பெரும் அவதி

ADDED : டிச 08, 2024 01:57 AM
கரூர், டிச. 8-
கரூர் மாவட்டத்தில், பல இடங்களில், நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள, வழிகாட்டி போர்டுகள் உடைந்த நிலையில் உள்ளன. வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
கரூர் நகரை சுற்றி மதுரை, சேலம், திருச்சி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கோவை, ஈரோடு மாநில நெடுஞ்சாலைகளும் செல்கிறது. தொழில் வளம் மிகுந்த கரூருக்கு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரி, கார், வேன் மற்றும் கன்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன. இதனால், கரூர் மாவட்டத்தில் பல இடங்களில், நெடுஞ்சாலை துறை சார்பில், பல்வேறு ஊர்களுக்கு செல்ல வசதியாக வழிகாட்டி போர்டுகள் வைக்கப்பட்டன. ஆனால், பல இடங்களில் வழிகாட்டி போர்டுகளில் இருந்த ஊர்களின் பெயர் அழிந்துள்ளது.
மேலும், பல போர்டுகள் உடைந்து, தொங்கிய நிலையில் உள்ளது. இதனால், கரூர் மாவட்டத்துக்கு வரும், வெளியூரை சேர்ந்த வாகன ஓட்டிகள், வழி தெரியாமல் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் மாவட்ட பகுதிகளில் உடைந்த நிலையில் உள்ள, வழிகாட்டி போர்டுகளை அகற்றி விட்டு, புதிய போர்டுகளை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.