/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜவஹர் பஜாரில் உடைந்த நிலையில் சுவர்கள்: விபத்து ஏற்படும் அபாயம்
/
ஜவஹர் பஜாரில் உடைந்த நிலையில் சுவர்கள்: விபத்து ஏற்படும் அபாயம்
ஜவஹர் பஜாரில் உடைந்த நிலையில் சுவர்கள்: விபத்து ஏற்படும் அபாயம்
ஜவஹர் பஜாரில் உடைந்த நிலையில் சுவர்கள்: விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : மார் 22, 2024 07:04 AM
கரூர் : கரூர் ஜவஹர் பஜாரில், சாலையில் தடுப்பு சுவர்கள் பல இடங்களில், உடைந்த நிலையில் உள்ளது.கரூர் நகரில் மையப்பகுதியாக உள்ள ஜவஹர் பஜாரில், தலைமை தபால் நிலையம், தாலுகா அலுவலகம், கிளை சிறை, தீய ணைப்பு நிலையம், ஜவுளி நிறுவனங்கள், ஜூவல்லரிகள் உள்ளது.
இதனால், ஜவஹர் பஜாரில் கடும் வாகன நெரிசல் ஏற்படும். இதனால், விபத்துகளை தவிர்க்க ஜவஹர் பஜாரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சாலையின் நடுவே தடுப்பு சுவர்கள் அமை க்கப்பட்டது.தற்போது, பல இடங்களில் தடுப்பு சுவர்கள் உடைந்துள்ளது. அதை சரி செய்யாமல், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் காலம் கடத்துகின்றனர். இதனால், தடுப்பு சுவர்கள் முழுமையாக உடைந்து விடும் பட்சத்தில், வாகனங்கள் தாறுமாறாக செல்லும். அப்போது, விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், ஜவஹர் பஜாரில் உடைந்த, தடுப்பு சுவர்களை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.