/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நில தகராறில் தம்பி அடித்துக்கொலை போதையில் அண்ணன் வெறிச்செயல்
/
நில தகராறில் தம்பி அடித்துக்கொலை போதையில் அண்ணன் வெறிச்செயல்
நில தகராறில் தம்பி அடித்துக்கொலை போதையில் அண்ணன் வெறிச்செயல்
நில தகராறில் தம்பி அடித்துக்கொலை போதையில் அண்ணன் வெறிச்செயல்
ADDED : ஜன 06, 2025 03:14 AM
ஓசூர்: ஓசூர் அருகே, நிலத்தகராறில் தம்பியை கொன்ற அண்ணனை, போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலுார் அருகே பட்டவாரப்பள்-ளியை சேர்ந்தவர் முனீந்திரா, 38, தச்சு தொழிலாளி. இவர் மனைவி சாந்தா, 35; தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். முனீந்-திரா வீட்டின் அருகே அவரது அண்ணன் ஸ்ரீராம், 40, வசிக்கிறார். கூலி தொழிலாளி. இவர் மனைவி ஷைலா, 38; தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். தனது, 20 சென்ட் நிலத்தை விற்ற முனீந்திரா, தாய் விமலம்மா பெயரிலுள்ள, 10 சென்ட் நிலத்தை கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் சகோதரர்களிடையே தகராறு ஏற்-பட்டது. இதனால் முனீந்திராவின் மனைவி சாந்தா நான்கு ஆண்-டுக்கு முன், மகன், மகளுடன், கெலமங்கலம் ஜிபியிலுள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நான்கு மாதங்களுக்கு முன், ஸ்ரீராமின் மனைவி ஷைலாவும் குழந்தையுடன் பாகலுாரி-லுள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று முன்தினம் மாலை, அதீத மது போதையில் இருந்த ஸ்ரீராம் மற்றும் முனீந்திரா இடையே, நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஸ்ரீராம், கட்டையால் சரமாரியாக தம்பியை தலையில் தாக்கிவிட்டு, வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை நீண்ட நேரமாக முனீந்திரா வீட்டின் கதவை திறக்காததால், அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். பாகலுார் போலீசார் சட-லத்தை மீட்டு, ஸ்ரீராமை கைது செய்தனர்.

