/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதர்மண்டிய செட்டிப்பாளையம் கதவணை பூங்கா: மக்கள் அவதி
/
புதர்மண்டிய செட்டிப்பாளையம் கதவணை பூங்கா: மக்கள் அவதி
புதர்மண்டிய செட்டிப்பாளையம் கதவணை பூங்கா: மக்கள் அவதி
புதர்மண்டிய செட்டிப்பாளையம் கதவணை பூங்கா: மக்கள் அவதி
ADDED : ஆக 11, 2025 05:38 AM
கரூர்: கரூர் மாவட்டம், அத்திப்பாளையம் பஞ்., செட்-டிப்பாளையம் பகுதியில், அமராவதி ஆற்றின் குறுக்கே, சிறிய அளவிலான கதவணை மற்றும் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இங்கு விடுமுறை நாட்களில், கரூர் மாவட்டம் மட்டுமின்றி, நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சுற்றுலா செல்வது வழக்கம். இதனால், கதவணையின் வாய்க்கால் பகுதியையொட்டி, சில ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டு, அதில், விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் அமைக்கப்பட்டன. கதவணைக்கு செல்லும் பொதுமக்கள் குழந்தைக-ளுடன் பூங்காவில்
விளையாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், கதவணை பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்-ளன. மேலும், பூங்காவில் முட்கள் அதிகளவில் முளைத்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்-துக்கள் நடமாட்டம் உள்ளதால், பூங்காவுக்கு செல்ல பொது மக்கள் தயங்குகின்றனர்.
எனவே, செட்டிப்பாளையம் கதவணை பூங்-காவில் விளையாட்டு உபகரணங்களை சீர-மைத்து, முட்புதர்களை அகற்ற அத்திப்பாளையம் பஞ்., நிர்வாகம் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.