/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த புகழூர் நகராட்சி வேண்டுகோள்
/
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த புகழூர் நகராட்சி வேண்டுகோள்
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த புகழூர் நகராட்சி வேண்டுகோள்
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த புகழூர் நகராட்சி வேண்டுகோள்
ADDED : ஏப் 09, 2024 07:15 AM
கரூர் : புகழூர் பகுதியில், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து, புகழூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண், 5,6 மற்றும் 12 முதல், 19 வரை, 10 வார்டுகளில், சிறிய அளவிலான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. மேலும், தவிட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் ஆய்வு செய்து, நீர் உறிஞ்சு கிணறுகள் துார்வாரப்பட்டது. 20
ெஹ.ச்.பி., நீர் மூழ்கி மின் மோட்டார் பொருத்தப்பட்டு, நீர் வழிப்பாதை ஆழப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, அனைத்து வார்டுகளுக்கும் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் சீரான குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. எனவே, கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை. இருந்தாலும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது

