குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
ADDED : ஜூன் 01, 2024 06:20 AM
அ நிறம் | அளவு
கரூர் : கரூர் அருகே, சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.
கரூர் அருகே வடக்கு காந்தி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில், 300க்கும் மேற்பட்ட வீடுகள், ஓட்டல்கள் உள்ளன. அந்த வழியாக, 30க்கும் மேற்பட்ட தெருக்களுக்கு பொதுமக்கள், வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில், பெரிய ஆண்டாங்கோவில் பிரிவு சாலையில், பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர்.இதனால், கரூர் வடக்கு காந்தி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள, குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
