/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குண்டும், குழியுமான சாலை; வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
குண்டும், குழியுமான சாலை; வாகன ஓட்டிகள் கடும் அவதி
குண்டும், குழியுமான சாலை; வாகன ஓட்டிகள் கடும் அவதி
குண்டும், குழியுமான சாலை; வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : ஜூன் 07, 2024 12:03 AM
கரூர் : கரூர் மாநகராட்சிக்குப்பட்ட கோதுார் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த பகுதியில் சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக, போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.
மேலும், அந்த சாலைகளில் மின் விளக்குகளும் இல்லை. கோதுார் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கரூர் நகர் மற்றும் ஈரோடு சாலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் தடுமாறி கீழே விழுகின்றனர். கரூர் மாநகராட்சி மற்றும் மூன்று கிராம பஞ்சாயத்து பகுதிகளை இணைக்கும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.எனவே, கோதுார் சாலையை உடனடியாக சீரமைக்க, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.