தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி

குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி

குண்டும், குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி


ADDED : செப் 23, 2024 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2024 04:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் அருகே, சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை சாலையில் இருந்து பிரிந்து, கத்தாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு தார்ச்-சாலை செல்கிறது. இந்நிலையில், தார்ச்சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. குறிப்பாக, சில இடங்களில், ஜல்-லிக்கற்கள் பெயர்ந்து, போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்-ளது. அந்த சாலையில், விவசாய நிலங்கள் மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன.மேலும், வெள்ளியணை சாலையில் இருந்து, திண்டுக்கல் ரயில்வே வழித்தடம் கேட் வழியாக, ஏராளமான வாகனங்கள், பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்கின்றன. மேலும், மின் விளக்குகள் வசதி இல்லாததால், இரவு நேரங்களில் குண்டும், குழியுமான சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவ-திப்படுகின்றனர். எனவே, வெள்ளியணை சாலை - கத்தாளப்-பட்டி சாலையில், புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us