க.பரமத்தியில் பஸ் ஸ்டாண்ட் தேவை: மக்கள் வலியுறுத்தல்
க.பரமத்தியில் பஸ் ஸ்டாண்ட் தேவை: மக்கள் வலியுறுத்தல்
ADDED : மே 12, 2026 05:25 AM
அ நிறம் | அளவு
கரூர், க.பரமத்தியில் பஸ் ஸ்டாண்ட் இல்லாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், வருவாய் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளிட்டவை உள்ளன.
கடைவீதியில் வாரச்சந்தை, கால்நடை சந்தை செயல்படுகின்றன. சுற்று வட்டார மக்கள் பல்வேறு தேவைகளு க்காக, க.பரமத்தி கடைவீதிக்கு வந்து செல்கின்றனர். க.பரமத்தியில் பஸ் ஸ்டாண்ட் வசதி இல்லாததால், பயணிகள் பஸ்சுக்காக சாலையின் இருபுறமும் காத்திருக்கின்றனர்.
கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் ஆபத்து ஏற்படும் சூழல் இருக்கிறது. மக்கள் நலன் கருதி, க.பரமத்தியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, இப்பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
