ரயில்வே ஸ்டேஷனுக்குள் செல்லாத பஸ்கள்: பயணிகள் கடும் அவதி
ரயில்வே ஸ்டேஷனுக்குள் செல்லாத பஸ்கள்: பயணிகள் கடும் அவதி
ADDED : மார் 09, 2026 06:33 AM
கரூர்; கோடைகாலம் துவங்கிய நிலையில், பயணிக-ளுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்க, கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்குள் பஸ்களை அனும-திக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு நாள்தோறும், 40க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. கரூர்-சேலம் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடத்தில், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதை தவிர, நாமக்கல், குளித்தலை, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாள்-தோறும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கரூர் நகருக்கு டெக்ஸ்டைல், கொசுவலை நிறு-வனத்துக்கு வேலைக்கு வருகின்றனர்.
ஆனால், கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளா-கத்தில் போதிய இடவசதி இருந்தும், அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்வது இல்லை. இதனால் பயணிகள், குழந்தைகள், லக்கேஜ் பொருட்க-ளுடன், 500 மீட்டர் துாரம் வரை நடந்து சென்று, பஸ்களில் செல்ல வேண்டிய அவல நிலை உள்-ளது. இதனால், கோடைகாலம் துவங்கிய நிலையில், கரூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்-துக்கள், அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்களை அனுமதிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் நட-வடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
