/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நொய்யல் பிரிவு சாலையில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும்
/
நொய்யல் பிரிவு சாலையில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும்
நொய்யல் பிரிவு சாலையில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும்
நொய்யல் பிரிவு சாலையில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும்
ADDED : ஜூலை 30, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, நொய்யல் குறுக்கு பிரிவு சாலையில், பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இங்கு எந்த பஸ்களும் நிற்காமல், நெடுஞ்சாலை ஓரத்தில் நிற்கிறது. அங்கு சென்று பொதுமக்கள் பஸ்களில் ஏறி பயணம் செல்கின்றனர்.
இதனால், காலியாக உள்ள நிழற்கூடத்தில் மது பிரியர்கள் அமர்ந்து, ஜாலியாக கும்மாளமிட்டு, மது அருந்தி விட்டு செல்கின்றனர். மேலும் இரவு நேரங்களில், சமூக விரோதிகளின் கூடாரமாக காணப்படுகிறது. பயணிகள் நிழற்கூடத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.