தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இரவில் நிற்காத பஸ்கள் க.பரமத்தி பயணிகள் தவிப்பு

இரவில் நிற்காத பஸ்கள் க.பரமத்தி பயணிகள் தவிப்பு

இரவில் நிற்காத பஸ்கள் க.பரமத்தி பயணிகள் தவிப்பு


ADDED : மார் 09, 2026 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; கரூர் -- கோவை நெடுஞ்சாலையில், 18வது கி.மீ., துாரத்தில் க.பரமத்தி உள்ளது. இப்பகுதியில் மத்திய அரசு அலுவலகம், வங்கிகள், தனியார் கல்லுாரிகள், அரசு, தனியார் பள்ளிகள் செயல்-பட்டு வருகின்றன.

இதனால், க.பரமத்தியில் வேலை நிமித்தமாக தினமும், 1,000க்கும் மேற்-பட்டவர்கள் கரூர் உட்பட பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.இப்பகுதியில் உள்ள மக்கள், கரூர், கோவை, திருப்பூர், செல்ல, க.பரமத்தி பஸ் நிறுத்தத்திலி-ருந்து புறப்பட வேண்டும். பகலில் ஒரு சில பஸ்கள் மட்டும், க.பரமத்தியில் நின்று செல்லும். இரவு நேரத்தில் கோவை, திருப்பூர், கரூரில் இருந்து செல்லும் பஸ்கள், க.பரமத்தியில் நிறுத்-தப்படுவது இல்லை. இதனால், மக்கள் அவதிப்ப-டுகின்றனர்.

பகல் நேரங்களில் தனியார், டவுன் பஸ்கள் இயக்கப்படுவதால், பொதுமக்கள் சமாளித்து கொள்கின்றனர். இரவு நேரத்தில், புறநகர் பஸ்-களை மட்டுமே நம்பி இருக்க வேண்டி நிலையுள்-ளது.

அந்நேரத்தில் பஸ்கள் நிற்காமல் சென்று விடு-கின்றன. எனவே, க.பரமத்தியில் அனைத்து பஸ்-களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us