/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நிற்காமல் செல்லும் பஸ்களால் தவிப்பு
/
நிற்காமல் செல்லும் பஸ்களால் தவிப்பு
ADDED : செப் 07, 2025 01:03 AM
கரூர் :கரூர் அருகே குட்டக்கடை ஸ்டாப்பில், பஸ்கள் நிற்காமல் செல்வதால் பயணிகள் தவிக்கின்றனர்.
கரூர், -கொடுமுடி சாலையில், 10வது கி.மீ., தொலைவில் குட்டக்கடை அருகில் பாரதிநகரில் பஸ் ஸ்டாப் உள்ளது. இதை கைலாசபுரம், சடையம்பாளையம், பசுபதிபாளையம், வசந்தம் காலனி, ஆலாம்பாளையம் உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கரூர், ஈரோடு செல்லும் அரசு, தனியார் பஸ்கள் நின்று செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பஸ் ஸ்டாப்பில் பெரும்பாலான பஸ்கள் நிற்பதில்லை என, பயணிகள் புகார் கூறுகின்றனர். இதனால், பஸ் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். எந்த பஸ் நிற்குமோ என்ற எதிர்பார்ப்புடன், பயணிகள் ஏறி செல்கின்றனர். இந்த பஸ் ஸ்டாப்பில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.