/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வியாபாரி வீட்டில் பீரோவை திறந்து 13 பவுன் நகை அபேஸ்
/
வியாபாரி வீட்டில் பீரோவை திறந்து 13 பவுன் நகை அபேஸ்
வியாபாரி வீட்டில் பீரோவை திறந்து 13 பவுன் நகை அபேஸ்
வியாபாரி வீட்டில் பீரோவை திறந்து 13 பவுன் நகை அபேஸ்
ADDED : அக் 30, 2025 02:45 AM
குளித்தலை, கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மாவத்துார் பஞ்., சின்னாம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, 60, கோழி கறிக்கடை வியாபாரி. இவர் கடந்த, 28ம் தேதி காலை 10:00 மணியளவில், மணப்பாறையில் உள்ள சிவன் கோவிலுக்கு மகள், மருமகனுடன் சென்று விட்டு, பழனிசாமி மட்டும் வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
வீட்டின் சாவி எங்கே உள்ளது என, தந்தையிடம் போன் மூலம் மகள் கேட்டுள்ளார். அதற்கு அவர், வீட்டின் மேல் சுவற்றில் இருப்பதாக கூறினார். சாவியை தேடி பார்த்தபோது கிடைக்கவில்லை. இதையடுத்து வீட்டுக்கு வந்த பழனிசாமியும், தேடி பார்த்தபோது சாவி கிடைக்கவில்லை.
பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த பழனிசாமி பார்த்தபோது, பீரோவில் இருந்த நான்கு பவுன் செயின் ஒன்று, ஒரு பவுன் செயின் மூன்று உள்பட தோடு, மோதிரம் என மொத்தம், 13 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பழனிசாமி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

