தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ காற்றாலை மின் கம்பங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

காற்றாலை மின் கம்பங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

காற்றாலை மின் கம்பங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்


ADDED : மார் 18, 2026 07:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 07:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே போக்குவரத்து, மழைநீர் வடிகால் பாதை, குடியிருப்பு பகுதிகளுக்கு இடையூறாக காற்றாலை மின் கம்பங்கள் அமைக்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புங்கம்பாடி மேற்கு, புங்கம்பாடி கிழக்கு ஊராட்சிகளில் உள்ள தேரப்பாடி, பால்வார்பட்டி, கணக்குவேலன்பட்டி, சின்னஅய்யம்பட்டி ஆகிய சிற்றுார்

களுக்கு செல்லும் தார்ச்சாலையை ஒட்டியே, காற்றாலை மின் கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன. இந்த கம்பங்கள் மழைநீர் செல்லும் வடிகால் கால்வாய், சில இடங்களில் குடியிருப்பு வீடு-களுக்கு மிக அருகாமையில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த சாலை வழியாக பள்ளி பஸ்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. சாலையை ஒட்டியே மின் கம்பங்கள் அமைக்கப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகி-றது. குறிப்பாக தேரப்பாடி கோவில் நுழைவாயில் வளைவு பகுதி மற்றும் கிரஷர் செல்லும் மண் சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

மேலும் கணக்குவேலன்பட்டி, பால்வார்பட்டி கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வீடுகளுக்கு அருகாமையில் மின் கம்பங்கள் நடப்படுவதால், பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை உள்ளது. காற்றாலை அமைப்பதற்காக, தனியார் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், கம்பங்கள் அமைப்பதற்கு தனியார் நிலங்களில் அனுமதி பெற்று செயல்பட வாய்ப்பி-ருந்தும், பொதுவழித்தடங்களிலும் சாலையோரங்களிலும் இடையூறு ஏற்படுத்தி, கம்பங்கள் அமைக்கின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களிடம், சம்பந்தப்-பட்ட தனியார் நிறுவனங்களின் மேலாளர்கள், 'ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனுமதி பெற்றுள்ளோம்' என கூறி, பணிகளை தொடர்வதோடு, தடுப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிப்போம் என மிரட்டுகின்றனர். எனவே, காற்றாலை மின் கம்பங்களை அமைக்கும் நிறுவனங்கள் மீது உரிய நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us