தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/வேளாண் உட்கட்டமைப்பு நிதி விண்ணப்பிக்க அழைப்பு

வேளாண் உட்கட்டமைப்பு நிதி விண்ணப்பிக்க அழைப்பு

வேளாண் உட்கட்டமைப்பு நிதி விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஜூன் 25, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 04:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:வேளாண் உட்கட்டமைப்பு நிதி பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் சார்பில், வேளாண் உட்கட்டமைப்பு நிதி மூலம் அதிகபட்சமாக, 3 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்திற்கு 2026--27ம் ஆண்டிற்கு, 57 கோடி ரூபாய் இலக்கீடு பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக, 2 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு, 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டுக்கு, 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது. துவக்க நிறுவனம் மற்றும் வேளாண் தொழில் முனைவோருக்கு அதிகபட்சமாக, 25 திட்டங்களுக்கு மட்டுமே நிதியுதவி அளிக்கப்படும். விவசாயிகள் தங்களின் வேளாண் விளைபொருட்கள் சந்தையினை அடையும் வகையில் உள்ள, பல்வேறு வினியோக தொடர் மேலாண்மை திட்டங்கள் அனைத்தும், இதன் மூலம் பயன் பெற தகுதி உள்ளவை.

இந்த திட்டத்தின் கீழ், மின் சந்தையுடன் கூடிய வினியோக தொடர்பு சேவை, சேமிப்பு கிடங்கு, சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருட்களை மதிப்பிடுவதற்கான அமைப்பு, தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்தும் இயந்திரங்கள், குளிர்பதன வசதி, போக்குவரத்து வசதி, முதன்மை பதப்படுத்தும் மையம், பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள், மின்னணு வணிக மையங்கள், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி உள்பட பணிகளை மேற்கொள்ளலாம். இத்திட்டத்திற்கு, https://agriinfra.dac.gov.in இணையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, கரூர் வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்), அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us