/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
செப்., 6, 7ல் தடகள போட்டி விண்ணப்பிக்க அழைப்பு
/
செப்., 6, 7ல் தடகள போட்டி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 25, 2025 03:05 AM
கரூர்: கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், 28வது இளையோர் மற்றும் பொது பிரிவினருக்கான தடகள போட்டி வரும் செப்., 6, 7ல் மாவட்ட அரசு விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.
அதில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மற்றும் விளையாட்டு சங்கங்களில் பயிற்சி பெறும் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கு பெறலாம். 10, 12, 14, 16, 18, 20 மற்றும் பொது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும்.இந்த போட்டியில் வெற்றி பெறும், 14, 16, 18, 20 வயதுக்குட்-பட்ட பிரிவுகளை சேர்ந்த மாணவ, மாணவியர் தகுதி அடிப்ப-டையில் தேர்வு செய்து, செங்கல்பட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். விருப்பம் உள்ள வீரர்கள், வீராங்கனைகள் athleticassociationkarur@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு வரும் செப்., 3க்குள் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினர் நேரில் வர வேண்டும். ஆதார் அட்டை, எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் அட்டை, பிறப்பு சான்று எடுத்து வர வேண்டும். ஒருவர் இரண்டு போட்டிகளில் மட்டும் பங்கேற்க வேண்டும். ஒரு போட்டியாளருக்கு நுழைவு கட்டண-மாக, 100 ரூபாயும், தொடர் ஓட்ட போட்டி அணிக்கு, 200 ரூபாய் செலுத்த வேண்டும்.
விபரங்களுக்கு, 9443410009, 9751003607, 9655697755 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். தகவலை, கரூர் மாவட்ட தடகள சங்க தலைவர் செல்வம், செயலாளர் பெருமாள் ஆகியோர் தெரிவித்தனர்.