தாட்கோவில் ஆடை வடிவமைப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தாட்கோவில் ஆடை வடிவமைப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : பிப் 08, 2026 06:05 AM
கரூர்: தாட்கோ சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்-குடியினர் இளைஞர்களுக்கு ஆடை வடிவமைப்பு, அழகுக்கலை பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு தாட்கோ சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்-வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்-கப்படுகிறது. இதில், தனியார் நிறுவனத்துடன் உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்-றுலா திறன்பயிற்சி. ஆடை வடிவமைப்பு, அழ-குக்கலை மற்றும் சிகை அலங்கார மேலாண்மை திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞர்-களுக்கு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வரு-மானம், 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். www.tahdco.com என்ற என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
