sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நுண்ணீர் பாசன திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

/

நுண்ணீர் பாசன திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

நுண்ணீர் பாசன திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

நுண்ணீர் பாசன திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஜன 22, 2026 07:19 AM

Google News

ADDED : ஜன 22, 2026 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: நுண்ணீர் பாசன திட்டத்திற்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டத்தில், மத்திய, மாநில அரசுகள் சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு, 1,500 ஹெக்டர் பரப்பில், 10.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியத்தில் ஒரு ஹெக்டருக்கு நுண்ணீர்பா-சனம் அமைக்க, ஜி.எஸ்.டி., வரியையும் சேர்த்து, 1.35 லட்சம் ரூபாய், மற்ற விவசாயிக-ளுக்கு (75 சதவீத மானியத்தில்) 1.05 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

தோட்டக்கலை பயிர்களுக்கு சிறு விவசாயிகள், 5 ஏக்கர் வரை-யிலும், குறு விவசாயிகள், 2.50 ஏக்கர் வரை-யிலும், 100 சதவீத மானியம், நுண்ணீர் பாசனம் அமைக்க வழங்கப்படும். மற்ற விவசாயிகள், 75 சதவீத மானியத்தில், 12.5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்து கொள்ளலாம். பயிர்களின் இடைவெளிக்கு ஏற்றாற்போல் மானியத் தொகை மாறுபடும். சொட்டு நீர் பாசனம் அமைத்து, 7 ஆண்டு நிறைவுற்று இருந்தால் புதியதாக மீண்டும் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொள்ளலாம். tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us