ADDED : ஜூன் 07, 2026 05:25 AM
கரூர்:சிறுபான்மையினர் குறைந்த வட்டியில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இது
குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம்,
குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான
சிறு தொழில் கடன், கல்விக் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில்
விண்ணப்பிக்க திட்டம் 1ன் கீழ், ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல்
குடும்ப வருமானம் இருக்க வேண்டும். திட்டம், 2-ல் குடும்ப ஆண்டு வருமானம்
கிராம நகர் புறங்களில், 8 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் இருக்க
வேண்டும்.
திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு, 6 சதவீதம்
வட்டி விகிதத்தில் 20 லட்சம் ரூபாய், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8
சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி, 30 லட்சம் ரூபாய் வரை கடன்
வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு, 5 சதவீதம்,
பெண்களுக்கு, 4 சதவீதம் வட்டி விகிதத்தில், 10 லட்சம் ரூபாய்- கடன்
வழங்கப்படுகிறது.
சுய உதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு, ஒரு
லட்சம் ரூபாய், 7 சதவீதம் வட்டியில் வழங்கப்படும். இப்படி பல்வேறு
திட்டங்களில் கடன் பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின்
இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது
அதன் கிளைகள் நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு
வங்கி ஆகிய அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
