/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மானியத்தில் புல் நறுக்கும் கருவி விண்ணப்பிக்க அழைப்பு
/
மானியத்தில் புல் நறுக்கும் கருவி விண்ணப்பிக்க அழைப்பு
மானியத்தில் புல் நறுக்கும் கருவி விண்ணப்பிக்க அழைப்பு
மானியத்தில் புல் நறுக்கும் கருவி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 24, 2025 01:26 AM
கரூர், மானியத்தில், புல் நறுக்கும் கருவிகள் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில், 70 மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மின்சார வசதிகளுடன் குறைந்தபட்சம், 2 கால்நடைகள் மற்றும் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனப்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் எந்தவொரு அரசாங்க திட்டத்திலும், இது போன்ற பயனை பெற்றிருக்கக் கூடாது.
இதுற்கு சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, சிறு, குறு விவசாயி சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்கலாம். தங்கள் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி எழுத்து மூலமாக விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.