ADDED : ஜூன் 12, 2026 05:05 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் மாநகராட்சி கமிஷனர் பிருத்விராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கரூர்
மாநகராட்சிக்கு சொந்தமான மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
வளாகத்தில், புதியதாக நீச்சல்குளம் கட்டப்பட்டு மாணவர், மாணவியர்
மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00
மணி வரை செயல்பட்டு வருகிறது. இந்த நீச்சல் குளத்தில் நீச்சல்
கற்றுக்கொள்ள விருப்பமுள்ள, 6 வயதுக்கு மேல் உள்ள மாணவ, மாணவியர்
மற்றும் பொதுமக்கள் கரூர் மாநகராட்சி நீச்சல் குளத்தில்
கொடுக்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அத்துடன் மாணவ,
மாணவியரின் ஆதார் நகல் மற்றும் பெற்றோரின் ஆதார் நகல்கள் இணைத்து
சமர்பிக்கலாம். இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.
