/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜெருசலேம் புனித பயணம் விண்ணப்பிக்க அழைப்பு
/
ஜெருசலேம் புனித பயணம் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : நவ 16, 2025 02:21 AM
கரூர்: கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணத்திற்கு, மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்-துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:தமிழகத்தை சேர்ந்த, அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய, 600 கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள ஒருவருக்கு, 37,000 ரூபாய், கன்னியாஸ்திரி ஒருவருக்கு, 60,000 ரூபாய் வீதம், 50 பேருக்கு நேரடியாக மானியம் வழங்கும் திட்-டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவத்தை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்தும் பதிவி-றக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்-பத்தை 2026 பிப்., 28-க்குள் உரிய ஆவணங்களுடன், ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலச மஹால் முதல் தளம், சேப்-பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

