ADDED : நவ 15, 2024 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியாத விளக்குகள் மாற்றப்படுமா?
கிருஷ்ணராயபுரம், நவ.15 -
கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் வாய்க்கால் பாலம் சாலை முதல், நரசிங்கபுரம் புனவாசிப்பட்டி நான்கு சாலை சந்திப்பு வரை தார் சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையில் உள்ள மின் கம்பங்களில் விளக்குகள் எரியாமல் பழுதடைந்துள்ளன. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். தெரு விளக்குகளை பராமரிப்பு செய்து எரிய வைக்க தேவையான நடவடிக்கையை பஞ்., நிர்வாகம் எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.