/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காந்தி சிலை அருகே விபத்து வேகத்தடை அமைக்கலாமே
/
காந்தி சிலை அருகே விபத்து வேகத்தடை அமைக்கலாமே
ADDED : ஜூன் 29, 2025 01:06 AM
குளித்தலை, குளித்தலை பஸ் ஸ்டாண்டில் திருச்சி, பெட்டவாய்த்தலை மற்றும் கரூர், திண்டுக்கல், மணப்பாறை, தரகம்பட்டி, முசிறி, துறையூர் மார்க்கத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கிறது.
இந்நிலையில் காந்தி சிலை அருகில், நகர பகுதியில் இருந்து பைக், கார், சரக்கு வாகனங்கள் வரும் போது, பஸ் ஸ்டாண்டு வரும் பஸ்களால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. விபத்துகளை தடுக்கும் வகையில், ஏற்கனவே காந்தி சிலை கிழக்கு பகுதி மற்றும் மேற்கு பகுதியில் வேகத்தடையை நகராட்சி நிறுவியிருந்தது.
பின்னர் வேகத்தடை அகற்றப்பட்டதால், அடிக்கடி சிறு சிறு விபத்துகள் நடந்து வருகிறது. எனவே இரண்டு இடத்தில் மீண்டும் வேகத்தடை அமைக்க, நகராட்சி முன்வர வேண்டும்.