/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலர் மீது கார் மோதி வாலிபர் பலி
/
டூவீலர் மீது கார் மோதி வாலிபர் பலி
ADDED : மே 29, 2025 01:47 AM
கரூர் கரூர் அருகே, டூவீலர் மீது கார் மோதிய விபத்தில், வாலிபர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் தமிழ் செல்வன், 29; இவர் கடந்த, 26 இரவு ேஹாண்டா டியோ டூவீலரில், கரூர்-திருச்சி சாலை காந்தி கிராமம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் காந்தி கிராமத்தை சேர்ந்த சந்தோஷ், 29; என்பவர் ஓட்டி சென்ற, மாருதி சுசூகி கார், தமிழ் செல்வன் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதியது.
அதில், தலையில் படுகாயமடைந்த தமிழ் செல்வன், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து, தமிழ் செல்வனின் மனைவி மார்கி ரோ ஜெயராணி, 28, போலீசில் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.